உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே வருசினநா தருமறை நூல் வழிபிழையா மனமுடையார் இருவினைபோய் விழமுறியா வெதிரியகா தியையெறியா நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே. (49)

முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர் வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்

செழுந்தண்பூம் பழசையுட் சிறந்ததுநா ளுஞ்செய வெழுந்த சேதிசத் துள்ளிருந்த வண்ணலடி விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத் தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ.

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்

(50)

அனகைத் தானருள் காண்குறிற்

கனகத் தாமரைப் பூமிசைச்

சினனைச் சிந்திமின் செவ்வனே.

(51)

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

நலங்கினர் திருமணியு நன்பொன்னுங் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமா னெருத்தஞ்சே ரணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.

தாழிசை

ஓல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள் எர்மலர மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியவிழ ஊர்களோ டுடன்முளைத்த ஒளிவட்டத் தமர்ந்தனையே; கனல்வயிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக