உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

12. திவாகரர்:

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. நான்கு கைகள், இரண்டு வல இடக் கைகளில் இரண்டு தாமரைப் பூக்களைப் பிடித்திருப்பார். மற்ற இரண்டு இட வலக் கைகளில் வில்வம் ஏந்தியிருப்பார். மஞ்சள் நிறப்பட்டு அணிந்திருப்பார்.

சில கோவில்களில் பன்னிரண்டு சூரியருடைய உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலில் பன்னிரண்டு சூரியர்களின் கற்சிலைகள் இருந்தன. மண்ணில் புதைத்து கிடந்த அந்தக் கற்சிலைகள் அண்மைக் காலத்தில் அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளன.