உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

என்றும்,

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

“வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும்

ஆனவன்காண்

99

என்றும் கூறுவது இந்தத் திராவிட-ஆரிய உறவைத்தான்.

கடைச்சங்க காலத்துக்குப் பிறகு - கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு - பௌத்த மதமும், சமண சமயமும் சிறப்படைந்துவிட்டன. அவை பொதுமக்களின், ஆதரவைப் பெற்றுச் செல்வாக்கடைந்துவிட்டன. அப்போது சைவ சமயம் தாழ்வ டைந்தது. ஆகவே, சைவ சமயம், முன்னைய உயர்நிலையை அடை வதற்குப் பௌத்த சமண சமயங் களுடன் போராட வேண்டி யிருந்தது. அதற்காகப் பக்தி இயக்கம் என்னும் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. பக்திக் கொள்கையை நாடெங்கும் பிராசாரம் செய்வதன் மூலமாகச் சைவ சமயம் மேன்மை யடைய முடியும் என்பதை உணர்ந்தனர். ஆகவே, பௌத்த-சமண சமயத்துக்கு எதிராகப் பக்திக் கொள்கைப் பிரசாரம் செய்யப் பட்டது. அக்காலத்தில்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றிப் பக்தி இயக்கத்தைப் பரப்பி, பௌத்த சமண சமயங்களை ஒடுக்கினார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையில் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் சைவ வைணவ ஆழ்வார்கள் பிரசாரம் செய்த பிறகுதான் பௌத்த சமண சமயங்களின் செல்வாக்கு அழிந்து அந்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன.

"

பௌத்த-சமண சமயங்கள் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடைந்த பிறகு, சைவ-வைணவப் பிரிவு அதிகப்பட்டு விட்டது. ஏறத்தாழ கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து சைவமும், வைணவமும் வெவ்வேறு தனி மதங்களாகப் பிளவுண்டன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டு வரையில் நிகழ்ந்த மதப் போராட்டத்தின் போது, ஆழ்வார் களும், நாயன்மார்களும் முறையே திருமாலையும் சிவபெருமானையும் போற்றிய போதிலும் பொது எதிரிகளாகிய சமண-பௌத்த மதங்களை வீழ்த்துவதிலேயே முக்கியமாக ஈடுபட்டிருந்தபடியால், அவர்கள் சைவ சமயம் வைணவ சமயம் என்னும் வேறுபாட்டுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் சைவ வைணவ உறவைப் போற்றி வந்தார்கள். பௌத்த - சமண சமயங்கள் தோல்வியுற்று வீழ்ச்சியடைந்தபிறகு, சைவ- வைணவப் பிரிவுகள் தோன்றலாயின. கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவ-வைணவம் இரண்டும் தனித் தனி மதங்களாகப் பிரிந்து