உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழகச் சமயங்கள் - சமணம்

35

"மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி

உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்.

-

(சிந்தாமணி, கேமசரியார், 25)

கீழ்காணும் சித்திரம் சமணசமய தத்துவத்தை விளக்கு கிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவங் களுக்குத் தக்கபடி தேவகதி, விலங்குகதி, நரககதி, மனிதகதி என்னும் நான்கு கதி களில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

Fi

பிறவிச் சக்கரத்திற்கு மேலே

உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம்,

நற்காட்சி,

நல்லொழுக்கம்

என்பவற்றைக் குறிக்கின்றன.

மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறை போன்ற ஒரு கோடும் அக்கோட்டின் மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படு கின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினை களை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது இந்தத் தத்துவக் குறியை சமணர் இல்லங்களிலும், கோவில்களிலும் காணலாம்.

1. தொடர்புரை 1 காண்க.

அடிக்குறிப்புகள்

2. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) “தன்மம் நன்மையைப் பயப்பது: அதன்மம் தீமையைப் பயப்பது” என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.