உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

3.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கள்ளாமை:

எவ்வளவு அற்பமான பொருளா யிருந்தாலும், அதனை அதற் குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக் கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். "நாட்டிலாயினும், காட்டிலாயினும், கிராமத்தி லாயினும், நகரத்திலாயினும், பிறர்க் குரிய பொருளை - அஃது அற்பமானதாக இருந்தாலும், விலை மதிக்கத் தக்கதா யிருந்தாலும், உயிருள்ளதாயிருந்தாலும், உயிரற்ற தாயிருந் தாலும் அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்பட மாட்டேன். மனம், மொழி, மெய்களால், கள்ளாமையை மேற் கொள்கிறேன்” என்று உறுதி கூறிச் சமண முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம் :

அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம், வாக்குக் காயங்களால், செய்யாதிருத்தல்.

"தெய்வங்களுடனாவது, மனிதர்களுடனாவது, விலங்குக ளுடனாவது, இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம், மொழி, மெய்களால், முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்” என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற் கொள்கிறார்.

5. அவாவறுத்தல்:

அஃதாவது முற்றத் துறத்தல். “துறத்த லாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் 'பரிக்கிரகத் தியாகம்' என்பர். “அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் கவாஅப் பிறப்பீனும் வித்து

(குறள் : 361)

என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவாவறுத்தல் வேண்டும்.