உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக சமயங்கள்

சமணம்

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சமணம், பௌத்தம் குறித்து முறையே தனித்தனியான நூல்களை எழுதினார். 1954 ஆம் ஆண்டு சமணமும் தமிழும் என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலே இத்தொகுதியாக அமைகிறது. தமிழில் சமணசமயம் குறித்து மிக விரிவாக முதல்முதல் எழுதப்பட்ட நூல் இதுவெனக் கூறமுடியும். சமண சமயம்தோன்றியவரலாறு,சமண தத்துவத்தின் பல்வேறு போக்குகள், தமிழ்நாட்டில் சமணசமயம் செயல்பட்ட வரலாறு சமண சமயத்திற்கும் பிற சமயங்களுக்கும்ஏற்பட்ட முரண்பாடுகள் படிப்படியாகச் சமணசமயம் மறைந்த வரலாறு ஆகியவற்றை இந்நூலின் முதல் பகுதியாக மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் பதிவு செய்துள்ளார். மேலும் சமகாலத்தில் சமண சமயம் எந்தெந்தப் பகுதிகளில் செயல்படுகிறது என்பது குறித்த விரிவான பதிவையும் செய்துள்ளார். சமணசமயத்தில் உயிர்கள் என்பதை எவ்விதம் வரையறை செய்கிறார்கள். சமண சமயத்தில் செயல்பட்ட பெண் துறவிகள் எப்படி இருந்தார்கள்? ஆகிய பிற தகவல்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

தமிழிற்கும் தமிழ்ச்சமூகத்தில் உருவான சமயங்களுக்குமான உறவை சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், கிறித்தவமும் தமிழும் என்ற பெயர்களில் பதிவு செய்தவர் இவரே. இவரைத் தொடர்ந்து சைவ சமயம், இசுலாம் ஆகியவைகுறித்தும் இவ்வகையான நூல்கள் எழுதப்பட்டதை அறிகிறோம். திராவிட கருத்தியல் பின்புலத்தைச் சார்ந்த மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் அவைதிக சமயங்களான சமணம் மற்றும் பௌத்தம் குறித்துசெய்தஆய்வுகள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. வைதிக சமயத்தை எதிர்கொள்வதற்கு அவைதிக