உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

அடிக்குறிப்புகள்

1. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர். சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர், சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது “இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத் தானே இருக்கிறார்கள்?" என்று கேட்டார்.

"நீங்கள் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத் துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும் மிக உயர்ந்த நிலையையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்று தான் உடை உடுத்து இருப்பார்கள்," என்று கூறியபோது அந்த நண்பர், “அப்படியா,” என்று அதிசயப்பட்டார்.

66