உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

/67

இவர்களால் சமண சமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமணசமயத்தவரல்லாத அரசரும் கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங் களையும் பொன்னையும் பொருளையும் "பள்ளிச் சந்தமாக”க் கொடுத்து உதவினார்கள்,

இத்தகைய காரணங்களினாலே, சமணசமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமண சமயம் (பௌத்த சமயம்கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந் ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந் ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன. “மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம் மிகுத்தே ஆதிஅரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார் பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு ஏதமில்சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்'

என்று, திருஞான சம்பந்தரின் தந்தையார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. மேலும்,

66

'அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட

ஞானசம்பந்தர் பிறந்தார் என்று ஷெ புராணம் கூறுகிறது.

இன்னும்,

"பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்

66

பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்

சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப

"பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி

அறியும்அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ

நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழுங் காலை

என்று பாண்டிய நாட்டிலும் சமணம் செழித்திருந்ததை அப்புராணம் கூறுகிறது. இச்செய்தியையே பிற்காலத்துத் திருவிளையாடற்