உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

7

வேங்கடசாமி அவர்கள் தன் கருத்து நிலையை உறுதி செய்யும் வகையில் சமணபௌத்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்.

மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் செய்துள்ள சமண சமயம் பற்றிய ஆய்வு என்பது, தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவாகச் சமண சமயமும் செயல் பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் இன்றைக்குத் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் பல்வேறு சமண சமயம் தொடர்பான நினைவுச் சின்னங்கள், மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் கருத்தை உறுதிப்படுத்துவனவாக அமைகின்றன. இத்துறையில் மேலும் விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்நூல் அடிப்படைத் தரவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும்

நன்றி.

சென்னை 96

ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்