உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

81

சைவ வைணவக் கடவுள்களைப் பற்றிக் கேட்பதும் 'பாவம்' என்று கருதினார்கள். இதனைச் சமணர் “கண்டு முட்டு, கேட்டு முட்டு” என்பர்.

66

"நீற்று மேனிய ராயினார் மேலுற்ற

காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்’

என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுவது காண்க. இவ்வாறு சமயப்பகை முற்றிக் காழ்ப்புக் கொண்டது. இந்தக் காலத்தில் தான் சைவ வைணவ ஆழ்வார்கள் தோன்றி நாடெங்கும் சுற்றுப் பிராயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம் தேட முயன்றார்கள். அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவறன்று. ஆனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும், மற்றச் சமயத்தவருக்கு இடை யூறுகளும். துன்பங்களும். உண்டாக்குவதும் கலகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகங்களும் நடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற காலம் கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளாகும்.

ம்

தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சமணப் பள்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக் கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்து விட்டன.

கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயப்போர் தமிழ்நாட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறினோம். அந்தச் சமயப் போர் முக்கியமாக மூன்று மதங்களில் நிகழ்ந்தது. ‘இந்து' மதத்துக்கும் சமணசமயத்துக்கும், இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்த மதத்துக்கும் சமண சமயத்துக்கும் ஆக மும்முனைப்போர் ஆக நடை பெற்றது. இந்துக்கள் சமண ரையும், பௌத்தரையும், தாக்கினார்கள். சமணர் இந்துக்களையும், பௌத்தர்களையும், தாக்கினார்கள். பௌத்தர் இந்துக்களையும், சமணர்களையும், தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப் போர் நடந்தது. இந்தப் போரில் இந்து மதம் பௌத்த மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது “பௌத்தமும் தமிழும்” என்னும் நூலில் கூறியிருக்கிறோம். இங்கு "இந்து" மதம் சமண மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம்.