உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

6

129

இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்து, பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும், தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து சூத்திரபிடகத் தின் சில பகுதிகளுக்கு இவர் உரை எழுதி யிருக்கிறார். சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் பிரிவைச் சேர்ந்தன உதான, இதிவுத்தக, விமான வத்து, பேத வத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபீடக என்னும் பகுதிகளுக்குப் பரமார்த்ததீபனீ எனும் உரையை எழுதியிருக்கிறார். அன்றியும், பரமார்த்த மஞ்ஜுஸா, நெட்டிப கரணாத்தகதா என்னும் நூல்களையும் எழுதியிருக்கிறார். "இதிவுத்தோதான - சரியாபிடக - தேர - தேரீ - விமான வத்து – பேதவத்து - நெத்தியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோச ஆசாரிய தம்மபால தேரோ ஸீஹௗ தீபஸ்ஸ ஸமீபே டமிளாரட்டே படரதித்தமிஹி நிவாஸீத்தா ஸீஹௗதீபே ஏவ ஸங்க ஹேத்வா வத்தபோ,” என்று இவரைப் பற்றிச் சாசன வம்சம் என்னும் நூல் கூறுகிறது. இதன் கருத்து யாதெனில், இதிவுத்தக முதலாக நெத்தி யட்டகதா இறுதி யாகக் கூறப்பட்ட உரைநூல்களை ஆசாரிய தம்ம பாலர் எழுதினார். இந்த ஆசாரிய தம்மபால தேரர் சிங்கள (இலங்கை)த் தீவுக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டில் படரதித்த விகாரையில் வசித்த போது எழுதினார் என்பதாம். இவர் பதினான்கு நூல்களை இயற்றியதாகக் கந்தவம்சம் என்னும் நூல் கூறுகிறது.

இவர் எழுதிய உரை நூல்களின் இறுதியில், அந்நூல்களைப் படராதித்தை விகாரையில் எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விகாரை நாகப்பட்டினத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது என்பர். அன்றியும் தெத்தி என்னும் நூலுக்கு இவர் எழுதிய நெத்திபகரணாட்டகதா என்னும் உரையை நாகப்பட்டினத்தில் இருந்த அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் இருந்து எழுதியதாக அந்நூல் இறுதியில் எழுதியிருக்கிறார்.

6

அன்றியும், சூத்திரபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களுக்குப் புத்தகோஷ ஆசாரியார் எழுதிய உரைகளுக்கு இவர் அத்தகதா என்னும் உரையை எழுதினார். இதனை, “விஸுத்தி மக்கஸ்ஸ மஹா டீகம், தீகநிகாயட்டகதாய டீகம், மஜ்ஜிமநிகா யட்டதாய டீகம், ஸம்யுக்த நிகாயட்ட கதாய டீகம் ஸாதி இமாயோ ஆசாரிய தம்மபாலதேரோ அகாஸி” என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுவது காண்க.