உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

28. புத்தாதித்தியர்

139

இவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவ கத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றி யிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை.

தமிழ்நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதிபாலர், இராகுல தேரர், பூர்வாசாரியார் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை.) மகா வஜ்ஜிரபுத்தி, சுல்ல வஜ்ஜிர புத்தி, சுல்ல தம்ம பாலர் முதலியவர்களைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சீபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் 'கந்த வம்சம்' (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.