உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

அருளின் றீந்தே னுரைப்பநனி நெகிழ்ந்து மலரினு மெல்லி தென்ப வதனைக்

காமர் செவ்வி மாரன் மகளிர்

நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த

வாளும் போழ்ந்தில வாயின்

யாதோ மற்றது மெல்லிய வாறே.’

கொடை யென்பது,

‘பாசடைப் போதிப் பேரருள் வாமன்

வரையா ஈகை போல யாவிருங் கொடைப்படு வீரக் கொடைவலம் படுமின்

முன்ன ரொருமுறைத் தன்னுழை யிரந்த அம்பி லரக்கர் வேண்டளவும் பருக

என்புதொறுங் கழிப்பித் தன்மெய் திறந்து வாக்கிக் குருதிக் கொழும்பதங் கொடுத்தது மன்றிக்

கருசிமிட் பட்ட கள்ளப் புறவின்

மாய யாக்கை சொல்லிய தாற்றன்

உடம்பு நிறுத்தக் கொடுத்தது மன்றி' எனவரும்.

149

படையாளர் பக்கமாவது, கருதியறியும் படையாளர் பக்கம். ஒற்றுமையாவது, சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறு பாட்டிற் கழிமனத்தை யொற்றுமை கொள்ளல். 'மற்று' மென்றமையால், எட்டியல் சான்றோர் பக்கமுட்படக் கண்டுகொள்க. எட்டியலாவன:

'அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை - யிழுக்காத நற்புலமை யோடு நடுவு நிலைமையே கற்புடைய வெட்டுறுப்புக் காண்’

என்றமையாலறிக. சான்றோர் பக்கமாவது, பகைவர் கண்ணுந் தன்பாலார்க்கண்ணு மொப்புமையாகப் பாசறையுள்ளாச் சால்புடைமை கூறுதல். அஞ்சாச் சிறப்பென்பதுமது. பிறவு மன்ன.’

3. குண்டலகேசி

وو

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துவிட்டது. 'தருக்கமாவன. ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம்,