உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

66

"கச்சிவளைக் கைச்சி காமகோட்ட டங் காவல்

-

மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்

செம்பொற் கிரிதிரித்த செண்டு'

179

என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த காமகோட்டத்துப் புத்தர் உருவச் சிலையை, இப்போது சென்னை அரசாங்கத்துப் பொருட்காட்சி சாலையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உருவம், இரண்டு கைகளையும் கால் முட்டியின்மேல் தாங்கி உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கிறது. மலையாளத்திலுள்ள சாத்தன் காவுகளிலிருந்த புத்த விக்கிரகங் கங்களும் எடுக்கப்பட்டு இதுபோன்ற ஐயனார் உருவங்களை வைத்தார்கள் போலும்.

'சாஸ்தா' என்னும் புத்தருடைய கோயில்களை ‘ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராம தேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்து விட்டது போலவே ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்து விட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக் கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப் படுகின்றது. இப்போது காணப்படும் தருமராஜா கோயில்கள்' என்பனவும் பண்டொரு காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந் திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்’ அல்லது ‘தருமராசன்' என்பது புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில் ‘தருமன்' என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் ‘தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளி னாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்ச பாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜாகோயில்களில் பௌத்தர்போற்றும் ‘போதி' என்னும் அரசமரங்கள்