உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

202

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே, மணி மேகலையைச் சீத்தலைச் சாத்தனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றி யிருக்க வேண்டும். மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில் "வேத வியாதனுங் கிருத கோடியும்

ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர் பத்து மெட்டு மாறும் பண்புறத்

தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர்”

என வரும் அடிகளிற், 'கிருதகோடி' என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. “கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திர மாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் 'போதாயனர்' என்பவர் இயற்றிய உரை. 'பிரபஞ்ச ஹிருதயம்' என்னும் சமஸ்கிருத நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம் (விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு ‘கிருத கோடி' என்பது பெயர் என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி 'உபவர்ஷர்' என்பவர் அதனைச் சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த சூத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய ‘ஸ்ரீ பாஷ்யம்' என்னும் உரையிலும், போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் 'பிரம்ம சூத்திரம்' என்னும் விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் ‘பூர்வா சாரியர் சுருக்கமாக அமைத்தார்' என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர் ‘பூர்வாசாரியர்' என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர் முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய 'கிருதகோடி' என்னும் உரை என்றும், இந்தக் 'கிருத கோடி' உரை எழுதிய போதாயனர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற 'மணிமேகலை’ அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த, கி.பி. முதலாவது, அல்லது