உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

223

ஆனால் இப்போது அண்மைக் காலத்தில் புதிய மாறுதல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வந்த கிரந்த எழுத்துக்களை மாற்றி நாகரி எழுத்துகளை இப்போது சிலகாலமாக வழங்கி வருகிறார்கள். எனவே இன்னும் சில ஆண்டு களில் கிரந்த எழுத்து தமிழ்நாட்டிலும் அடியோடு மறைந்து போகும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் நாட்டிலே இருந்து வருகிற பழைய சமயங்கள் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்பவை. தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்த சமயங்கள் இஸ்லாம் மதமும் கிருஸ்துவ மதமுமாகும். இந்த மதங்கள் எல்லாம் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஒவ்வொரு வகையில் தொண்டு செய்திருக்கின்றன. ஆனால், பௌத்த-சமண சமயங்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் செய்துள்ள தொண்டுகள் மிகச் சிறந்தவை. இந்தச் சமயங்களின் தமிழ்த் தொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன் எழுத்தினால் பொறிக்கப்பட வேண்டியவை. சமயப் பற்றைக் கடந்து நடுநிலையில் நின்று ஆராய்கிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். தமிழ்நாட்டில் பௌத்த-சமண சமயங்கள் மறைந்த போதிலும் அந்த மதங்கள் செய்த தமிழ்த் தொண்டுகள் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றன.