உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

237

கிழவி பிடிவாதமாக மாட்டேன் என்று கூறிவிட்டாள். பிறகு, குடியர்கள் கிழவிக்கு மதுபானத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். கிழவி மது அருந்தி மயங்கினாள். அப்போது அவர்கள் பன்றிக் குட்டிகளை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார்கள். கிழவி, “மகா துண்டிலனை விற்க மாட்டேன், சுல்ல துண்டிலனை எடுத்துக் கொண்டு போங்கள்” என்று கூறினாள். குடியர் சுல்ல துண்டிலனை பிடித்துக் கொடுக்கும்படி கூறினார்கள். கிழவி தொட்டியில் உணவை இட்டு சுல்ல துண்டிலனைக் கூப்பிட்டாள். அப்போது மகா துண்டிலன் சுல்லதுண்டிலனிடம் “அம்மா வழக்கமாக முதலில் என்னைக் கூப்பிடுவாள். இன்று உன்னைக் கூப்பிடுகிறாள். இதில் ஏதோ சூது இருக்கிறது, நீ போய் விழிப்பாய் பார்த்து வா” என்று கூறி அனுப்பிற்று. இளையபன்றி வந்து பார்த்து, தொட்டியில் தீனி இருப்பதையும் பக்கத்தில் சிலர் சுருக்குக் கயிறுகளுடன் நிற்பதையுங் கண்டு நடு நடுங்கி ஓடிவந்தது. தான் கண்டதைத் தன் அண்ணனிடம் கூறிற்று.

அப்போது மகாதுண்டிலன் சுல்ல துண்டிலனுக்குக் கூறிற்று : “நீ எங்கே போவாய்? இறைச்சிக்காக உணவு கொடுத்து வளர்த்தார்கள். இறைச்சிக்காக உன்னை விற்கிறார்கள். பளிங்கு போன்ற தூய்மையான நீரிலே குளித்து உடம்பிலுள்ள வியர்வைகளையும், அழுக்குகளையும் கழுவிச் சுத்தஞ்செய்து வாசனைத் தைலத்தைப் பூசிக்கொள்” என்றது. "பளிங்கு நீரிலே குளித்து வாசனைத் தைலத்தைப் பூசிக்கொள் என்பதன் பொருள் என்ன?" என்று சுல்ல துண்டிலன் கேட்டது? மகா துண்டிலன் இவ்வாறு விளக்கங்கூறிற்று: “பளிங்கு போன்ற தூயநீர் என்பது நன்னெறி. அழுக்கும் வியர்வையும் என்பது பாவச் செயல்கள். வாசனைத் தைலம் என்பது நல்ல ஞானமும், நல்லொழுக்கம் ஆகும்."

போதி சத்துவராகிய மகா துண்டிலன் சொன்ன வாசகங்கள் ஊரெங்குங் கேட்டன. இந்த அருமையான பொன்மொழிகளை மக்கள் அனைவரும், அரசனும் மந்திரிகளும் கேட்டார்கள். ஆச்சரியமடைந்து மகா துண்டிலனையும், சுல்ல துண்டிலனையும் அரண்மனைக்கு அழைத்து வந்து ஆசனங் கொடுத்து உபசரித்தார்கள். மகாதுண்டிலன் அவர்களுக்கு நன்னெறிகளையும்

போதித்தது.

நல்லொழுக்கங்களையும்

அரசன் அறிவுள்ள இந்தப் பன்றிக்குட்டிகளை இளவரசர்களாக் கினான். பன்றி வழக்குகளை நீதியாகத் தீர்ப்பதற்குச் சட்டங்களை