உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

251

நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே, சமண சமயம் தமிழ் நாட்டில் வந்திருந்தது. ஆனால், அது பொதுமக்களிடையில் செல்வாக்கு பெறவில்லை. தமிழ் நாட்டில் பௌத்த பிக்குகள் பௌத்த மதப் பிரசாரம் செய்யத் தொடங்கிய போது, சமண சமயமும் தனது மதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கியது. ஆனால், தமிழர் அந்த மதங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் என்ன வென்றால், அக்காலத்துத் தமிழ் மக்களின் கொள்கைக்கும் பௌத்த சமண சமயங்களின் கொள்கைகளுக்கும் பெரிய வேறு பாடுகள் இருந்தன. அக்காலத் தமிழர் வாழ்க்கையின் குறிக் கோளுக்கும் சமண பௌத்த மதங்களின் குறிக்கோள்களுக்கும் பெரிய முரண்பாடுகள் இருந்தன. அவை என்னவென்றால்.

1.

2.

இக்காலத்து மேல்நாட்டரைப் போல, சங்க காலத்து தமிழர் இவ்வுலக வாழ்க்கையையே முக்கியமாகக் கருதினார்கள். வீரத்தையும் காதலையும் தமது வாழ்க்கையின் குறிக் கோளாகக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு நேர்மாறாக இருந்தது பௌத்த சமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். பௌத்த, சமண சமயத்தார் இவ்வுலக வாழ்க்கையை இழிவுபடுத்தியும் துறவறத்தை உயர்வுபடுத்தியும் போற்றினார்கள். கொல்லாமை, புலாலுண்ணாமை என்பவற்றை வலியுறுத்தினார்கள். இந்த முரண்பட்ட கொள்கைகளினாலே பௌத்த, சமண சமயங்கள் தமிழ் நாட்டில் முதலில் இடம் பெறவில்லை.

தமிழர் வீரத்தையும் வீரச்செயல்களையும் பொன்னே போல் போற்றினார்கள். வீரர்களின் வீரச்செயல்களைப் புகழ்ந்து கவி பாடி இலக்கியம் எழுதினார்கள். வீரத் தெய்வங்களாகிய முருகனையும், பொற்றவையையும் வழிபட்டு அவற்றிற்கு ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டு வாழ்த்தினார்கள். உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரையில் இவ்வழக்கம் எல்லோரிடத்திலும் இருந்தது. அக்காலத்துப் பார்ப்பனரும், ஏனைய நாட்டுப் பார்ப்பனரைப் போலவே மாமிச உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளவராக இருந்தனர். முயலையும், நாய்கள் பிடித்துக் கொண்டு வந்த உடும்பையும் கூட உண்டார்கள்.

இவ்விதச் சூழ்நிலையில், பௌத்த, சமண சமயங்கள் வலியுறுத்திய கொல்லாமை, ஊன் உண்ணாமை என்னும் கொள்கை