உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

255

கொண்டான். அதே காலத்தில், கடுங்கோன் என்னும் பாண்டியன் களபர் அரசனை வென்று, பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். இந்தப் பாண்டியனோ அல்லது சேர அரசனோ (யார் என்று தெரியவில்லை) களபரனிடமிருந்து சேர நாட்டைக் கைப்பற்றினான். இவ்வாறு, களபர அரசனிடமிருந்து தமிழகம் மீண்டும் பாண்டிய சேர அரசர்களிடம் வந்து விட்டது. ஆனால் சோழ நாடு சோழர்களிடம் போகாமல், களபரனிடமிருந்து பல்லவ அரசனிடம் போய்விட்டது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. சைவ அடியார்களும், வைணவ அடியார்களும் தோன்றிப் பக்தி இயக்கத்தை நாடெங்கும் பரப்பினார்கள். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் பக்தி இயக்கம் உச்ச நிலையில் இருந்தது. பக்தி இயக்கத்தினால் சைவ வைணவ சமங்கள் வலிவு பெற்றன. பௌத்த சமண சமயங்கள் வீழ்ச்சியடைத் தொடங்கின.

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவாரப்பாடல்களும், மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையாரும் ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களும் ஆகும். உலா, அந்தாதி, கலம்பகம், கோவை, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தவகை நூல்களும் இக்காலத்திலேயே தோன்றின. ஏறக்குறைய கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வைச சமயமும், வைணவ மதமும் தனித்தனி மதங்களாகப் பிரிந்து அவைகளுக்குத் தத்துவ சாத்திரங்கள் எழுதப்பட்டன. சிவஞானபோத. சிவஞானசித்தியார், உண்மை விளக்கம் சிவப்பிரகாசம், திருவருட் பயன், திருக்களிற்றுப்படியார் திருவுந்தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின. வைணவ சித்தாந்த நூல்கள் வடமொழியிலே இயற்றப்பட்டன. நாலாயிரப் பிரபந்தத்திற்கு மணிப் பிரவாள நடையில் உரைநூல்கள் எழுதப்பட்டன. கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய சமய நூல்களும் தோன்றின. கந்தபுராணம் போன்ற புராணங்களும் ஏனைய தலபுராணங்களும் தமிழில் தோன்றின.

தேவாரம், திருவாசம், நாலாயிரப்பிரபந்தம் என்னும் பக்திப் பாடல்கள் தொடர்பு அறாமல், வழிவழியே 19ஆம் நூற்றாண்டு வரையில் வந்துள்ளன. திருமாளிகை தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர்,