உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

66

"அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா

ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம் விஞ்ஞான பச்சயா நாமரூபம் நாமரூப பச்சயா ஸளாயதனம் ஸளாய்தன் பச்சயா பஸ்ஸோ பஸ்ஸ பச்சயா தண்ஹா தண்ஹா பச்சயா உபாதானம் உபாதான பச்சயா பவோ

பவஜாதி பச்சயா ஜராமரணம்

31

ஸோக பரிதேவ துக்க தோமஸ் ஸுபாயாஸா ஸம்பவந்தி இத்திரிபிடக வாக்கியத்தைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்து, சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:

"பேதைமை சார்வாச் செய்கை யாகும்

செய்கை சார்வா உணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்

அருவுரு சார்வா வாயி லாகும் வாயில் சார்வா ஊறா கும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் வேட்கை சார்ந்து பற்றா கும்மே பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக

வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்

தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரும் என்ப.

99

-

(LD600fl. 30: 104-117)

இவ்வாறு துன்பத்திற்கு (பிறப்பிற்கு)க் காரணமான பன்னிரண்டு சார்பு களையும் கூறியபின்னர், பிறவாமையாகிய இன்பத்திற்குக் காரணத்தை விநயபிடகம், மகாவக்கம், முதற் காண்டம் மேலும் கீழ்வருமாறு கூறுகிறது: