உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

66

"சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்

35

என்றபடி இச்சார்புகளை அறுத்து வீடுபெறுவதே பௌத்தர் களின் நிர்வாண மோட்சமாகும். வீடுபேறடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மை களை (சத்தியங்களை) அறியவேண்டும். நான்கு உண்மைகளாவன: 1. நோய் (துக்கம்), 2. நோய் காரணம் (துக்கோற் பத்தி), 3. நோய் நீங்கும் வாய் (துக்க நிவாரணம்), 4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்) என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்:

1.

நோய்:

பிறத்தல் துன்பம். பிணி, மூப்பு, சாக்காடடைவது துன்பம். அரற்று, கவலை, கையாறு இவை எல்லாம் துன்பந் தருவன. சுருங்கக்கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுகள் எல்லாம் துன்பம் தருவன என்று அறிதல் முதல் உண்மை.

66

ணர்வே அருவரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலை கையாறென நுவலப் படுவன நோயா கும்மே.’

وو

2.

நோய் காரணம்:

(மணி 30: 179-182)

துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பவைகளை உணர்வது இரண்டாவது உண்மை.

66

'அந்நோய் தனக்குப்

பேதைமை செய்கை அவாவே பற்றுக்

கரும வீட்டமிவை காரணம் ஆகும்.

3.

நோய் நீக்கும் வாய்:

-

(மணிமேகலை 30: 183-185)

நோயையும் நோய்க்குக் காரணமாக இருப்பவைகளையும் நன்கறிந்து இவற்றிற்கு ஆசை (அவா) தான் காரணம் என்பதை நன்குணர்ந்து நோயினின்று விடுதலையடையும் வாயிலை அறிவது மூன்றாவது உண்மை.