உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

செய்தி அவனுடைய சாசனத்தினால் தெரிகிறது. "மற்றும் கோயிற்குரிய தெல்லாம் அகப்பட திருமூலவாசத்து படிரர்க்கு அட்டிக்குடுத்தது” என்று அந்தச் சாசனம் கூறுகிறது.

66

மூல சோமவிகாரையில் இருந்து காந்தார தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட லோகநாதர் (அவலோகிதர்) உருவச் சிலையின் பீடத்தில் தக்ஷிணாபதே மூலவாச லோகநாத" என்று எழுதப்பட்டிருக்கிறது. மூலசோம விகாரையிலிருந்த வச்சிரநந்தி என்னும் பௌத்தப்பிக்கு தன்னுடைய சீடர்களுடன் சீன நாட்டுக்குச் பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்தார் என்று

சென்று

சொல்லுகிறார்கள்.

திருவாங்கூரின் மத்தியபாகத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் உள்ளன. குன்னத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிக் கல் என்னும் ஊரில் ஒரு புத்த உருவச்சிலை இருந்தது. அது தலையுடைந்து கிடக்கிறது. இப்போது இது திருவாங்கூர் காட்சிச் சாலையில்

வைக்கப்பட்டிருக்கிறது.

அம்பலப்புழ தாலுக்காவில் கருமாடித்தோடு என்னும் ஆற்றங் கரைமேல் ஒரு புத்தச்சிலை உண்டு. இதன் இடதுகை இப்போது ஒடிந்து விட்டது. இந்தப் புத்தச் சிலையை அவ்வூரார் கருமாடிக்குட்டன் என்று கூறுகிறார்கள். இதனைப் பூசை செய்தால் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் உண்டாகிற நோய் நீங்கும் என்று கூறுகிறார்கள்.

மாவேலிக்கா என்னும் இடத்திலும் ஓர் அழகிய புத்த உருவம் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறது.

பரணிக்காவு என்னும் இடத்திலும் ஒரு புத்த விக்கிரகம் உண்டு. மருதூர் குளக்கரையில் இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது, கருநாகப்பள்ளி தாலுக்கா அலுவலகத்துக்கு முன்புள்ள சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.