உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

93

பெற்றுக் கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவ தில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்த மதத்தி னின்று பெற்றுக் கொண்டார் என்பது மட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவரு மான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' அஃதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாத்வாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தர காண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப் படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பது நன்கு விளங்குகின்றது. கு

அன்னப்பறவையின் அவதாரம்

பௌத்தர்களுக்குரிய புத்த ஜாதகக் கதைகள் புத்தருடைய பழம் பிறப்புக்களைக் கூறுகின்றன. அக் கதைகளில் ஹம்ச ஜாதகமும் ஒன்று. அஃதாவது புத்தர் பெருமான், அன்னப்பறவையாகப் பிறந்து அரசனுக்கும் மக்களுக்கும் அறநெறி உரைத்தார் என்று கூறப்படுகிறது. இக்கதை, ஹம்ச ஜாதகம், சுல்ல (சிறிய) ஹம்ச ஜாதகம், மகா (பெரிய) ஹம்சஜாதகம் என்னும் மூன்று கதை களில் கூறப்படுகிறது. புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக்கொண்ட வைணவர்கள், இந்த அம்ச ஜாதகக் கதையையும் ஏற்றுக் கொண்டார்கள். அஃதாவது புத்தரைப் போலவே திருமால் அன்னப்பறவையாகப் பிறந்து அறமுரைத்தார் என்று வைணவர்கள் கூறினார்கள்.

தம்

திருமங்கை ஆழ்வார் மட்டும் இந்தக் கதையைத் பாசுரங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனைய ஆழ்வார்கள் இக்கதை யைக் கூறவில்லை. திருமங்கை ஆழ்வார் கூறுகிற அன்னப் பறவை அவதாரம் பற்றிய செய்யுட்களாவன:

66

துன்னிமண்ணும் விண்ணோடும்

தோன்றாது இருளாய் மூடியநாள்

அன்னமாகி அருமறைகள்

அருளிச்செய்த அமலன்

(5-பத்து. 1-திரு.6)