உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

113

என்று திரிசரணம் கூறவேண்டும். திரிசரணத்தை மூன்றுமுறை கூறவேண்டும்.

இவ்வாறு திரிசரணம் கூறித் துறவு பெறும்படி, பிக்குகளே! உங்களுடைய ததாகதர் அனுமதியளிக்கிறார் என்று அருளிச் செய்தார்.

ஜடாதர தபசிகள்

அக்காலத்திலே உருவேல ஜனபதத்தில் நேரஞ்சர நதிக் கரையில் வெவ்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்துக் கொண்டு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் உரு வேல காசிபர் மூத்தவர். அவருக்கு ஐந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இரண்டாவது சகோதரருக்கு நதிகாசிபர் என்பது பெயர் (நதி - நிரஞ்சா நதி). இவருக்கு முந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இளையவருக்குக் கயாகாசிபர் என்பது பெயர். இவருக்கு இருநூறு சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் சடையை வளர்த்துத் தீ (அக்கினி) வழிபாடு செய்து வந்தனர்.

பகவன் புத்தர், உருவேல காசிபரிடம் சென்று அவரிடம் பேசினார். பிறகு, "காசிபரே! நான் இருப்பது தங்களுக்குக் கஷ்ட மில்லாமல் இருந்தால், உம்முடைய எக்யசாலையில் ஒரு இரவு தங்குகிறேன்" என்று கூறினார்.

"மகா சிரமணரே! தாங்கள் தங்குவது எனக்குக் கஷ்டம் அல்ல. ஆனால், அங்கு ஒரு குரூரமான பாம்பு உண்டு. அது உமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்?" என்றார் காசிபர்.

66

‘அதனால் எனக்கு ஒன்றும் தீங்கு நேராது. எக்கியசாலையில் நான் தங்க உத்தரவு கொடுங்கள்” என்று கேட்டார் பகவர். அவரும் உத்தரவு கொடுத்தார்.

பகவன் புத்தர் எக்கியசாலைக்குச் சென்று தர்ப்பைப் புல் சனம் அமைத்து அதில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பெரிய நாகப்பாம்பு கோபங்கொண்டு மூக்கின் வழியாக நச்சுப் புகையை வீசிற்று. அந்த நச்சுப் புகை பட்டால் சாதாரண ஆட்களின் தோல், சதை, எலும்புகள் கருகிக் கறுத்துப்போகும். ஆனால், பகவன் புத்தரின் யோக சக்தியினாலே அந்த நச்சுப்புகை அவரை ஒன்றும் செய்யவில்லை. பிறகு, பகவர் “இந்தப் பாம்பின் கொடுமையை அடக்குவேன்” என்று கருதிக் கொண்டு, தமது இருத்தி சக்தியினாலே அங்கு ஒருவிதப்