உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

அவர்கள் வணக்கத்துக்குரிய அநுருத்தமகா தேரரை இதன் காரணம் என்ன என்று கேட்டார்கள். அவர், வாசந்தர்களே! தேவர்களின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது” என்று கூறினார்.

"தேவர்களின் எண்ணம் என்ன? தேரரே!”

66

6

வணக்கத்துக்குரிய மகாகாசப மகாதேரர், தம்முடைய பிக்குச் சங்கத்துடன் பாவாபுரியிலிருந்து குசிநகரத்துக்கு இப்போது வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து பகவன் புத்தரின் திருவடிகளை ள வணங்கின. பிறகுதான் தீப் பற்றி எரியும்" என்று மகாதேரர் கூறினார். அப்படியே ஆகட்டும்” என்று அவர்கள் சொன்னார்கள்.

66

மகாகாசப மகாதேரர் பிக்கு சங்கத்துடன் விரைந்து வந்து மள்ளருடைய கோவிலுக்கருகில் ஈமவிறகின்மேல் வைக்கப் பட்டிருந்த பகவன் புத்தரின் திருமேனியை மும்முறை வலம் வந்து திருவடிகளைப் பணிந்தார். அவ்வாறே மற்றப் பிக்குகள் எல்லோரும் வலம் வந்து வணங்கிப் பணிந்தார்கள். எல்லோரும் பணிந்து வணங்கிய பிறகு தீ பற்றி எரிந்தது.

பகவன் புத்தருடைய திருமேனி தீயில் எரிந்து சாம்பலாயிற்று. திருமேனி முழுவதும் எரிந்து சாம்பலான பிறகு எலும்புகள் மட்டும் எரிந்து கருகி எஞ்சியிருந்தன. அப்போது மழை பெய்து தீயவிந்தது. மள்ளர்களும் நறுமணமுள்ள நீரினால் சாம்பலை அவித்து எலும்பு களை எடுத்துப் பொற்றட்டில் வைத்துக் குசி நகரத்து மண்டபத்துக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். போய் அங்கு அதை வைத்துப் பூக்களை இட்டு வணங்கி எழுநாட்கள் விழா கொண்டாடினார்கள். சேதியம் கட்டியது

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தார் என்பதைக் கேள்விப் பட்ட அஜாதசத்துரு அரசன், தூதுவரை அனுப்பித் தனக்குப் புத்தருடைய தாது சிலவற்றை அனுப்பும்படிக் கேட்டான். அவ்வாறே வைசாலி நாட்டு லிச்சாவியரும், கபிலவத்துச் சாக்கியரும், அல்ல கப்பை பூலிகரும், இராம கிராகத்துக் கோலியரும், பாவாபுரி மள்ளர் களும், வேட்ட தீபத்துப் பிராமணர்களும் தங்களுக்குப் புத்த தாது வேண்டும் என்றும் அந்தத் தாதுவின்மேல் சேதியங்களை அமைக்கப் போவதாகவும் கூறினார்கள்.