உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-9



தசசீலம் (பத்து ஒழுக்கம்)

பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ளவேண்டும். சீலத்தைச் சிக்காபதம் என்றும் கூறுவர். தசசீலத்திலே பஞ்சசீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்சசீலங்களையும், துறவறத்தார் தசசீலங்களையும் தினந்தோறும் ஓத வேண்டும். தசசீலத்தின் பாலிமொழி வாசகம் இது:

1. பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

2. அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

3. அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

4. மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

5. ஸுராமேரய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

6. விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸாதியாமி

7, 8, 9. நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷண்ட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

10. உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி


இதன் பொருள் வருமாறு:

1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன்.
2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற்கொள்கிறேன்.
3. பிரமசரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கிறேன். (இது இல்லறத் தாருக்குப் பிறர் மனைவியரிடத்தும் பிற புருஷரிடத்தும் விபசாரம்செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துறவறத்தாருக்குப் பிரமசரிய விரதம் என்பது இணை விழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்.)
4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.