உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

நாணென்கோ நாகமென்கோ நன்றில்லான் பூணுந் தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை. ஓரடி அம்போதரங்கம்)

கைந்நாகத் தார்க்காழி கைகொண் டளித்தனையே! பைந்நாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே! இரந்தேற்ற படையரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே! பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே! எனவாங்கு

(சுரிதகம்)

அருள்வீற் றிருந்த திருநிழற் போதி

முழுதுணர் முனிவநிற் பரவுதும் தொழுதக ஒருமன மெய்தி இருவினைப் பிணிவிட

முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்து

ஓங்குநீர் உலகிடை யாவரும்

நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே.

171