உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

19

நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்தசரித்திரங்கள்,அந்த அற்புத செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது.ஆயினும் இதுவிரிவான நூல் என்று கூறுவதற்கில்லை. சில செய்திகள் விரிவஞ்சி விடப்பட்டன. ஆயினும் ஆயினும் முக்கியமான வரலாறுகளை விடாமல் கூறப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தின் தத்துவமாகியநான்கு வாய்மைகளும அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப்பட்டுள்ளன. பெளத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவு பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின் ணைப்பாகத் திரிசரணம், தசசீலம், திரிபிடசு அமைப்பு கிய இவைகள் விளக்கப்படுகின்றன. பழந்தமிழ் நூல்களிலே சிதறிக்கிடக்கிற புத்தர் புகழ்ப்பாக்கள், தொகுக்கப்பட்டு இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இனியஇப்புகழ்ப்பாக்கள் வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்நூலில் காணப்படும் குற்றங்களை நீக்கிக் குணத்தைக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். இதனை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டு வெளியிட்ட ஸ்டார் பிரசுரக்காரர்களுக்கு

எனது அன்பும்,நன்றியும் உரியனவாகும்.

சென்னை

15-5-56

4

இங்ஙனம்

மயிலை சீனி. வேங்கடசாமி