உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

அச்சத்திற்கு இடந்தரக் கூடாது என்று நினைத்து அவ்விடத்திலேயே தங்கியிருந்தார். எவ்விதமான காரணங்களினாலும் காடுகளில் அச்சம் ஏற்படுங்காலங்களில் அஞ்சாமல் இருப்பதற்குப் பழகிக்கொண்டார். இந்தக் காரணங்களை அறியாமல் மற்றவர் யாரேனும் அச்சங் கொண்டால் அவர்களுக்கு இக் காரணங்களை யறிவித்து அவர்க ளுடைய அச்சத்தை நீக்கினார்.

கௌதம முனிவர் தூரத்திலுள்ள கிராமத்திற் சென்று உணவைப் பிச்சை ஏற்று உண்பது வழக்கம். சில காலம் சென்ற பின்னர் இவ்வாறு உணவு கொள்வதை நிறுத்திக் காட்டில் சென்று அங்குள்ள பழங்களைப் பறித்து உண்ணப் பழகினார். இவ்வாறு சில காலஞ் சென்றது. பிறகு மரத்திலிருந்து கனிகளைப் பறிப்பதை நிறுத்தித் தாமாகவே மரத்தி லிருந்து பழுத்து உதிர்ந்து விழுகிற பழங்களைமட்டும் எடுத்துச் சாப்பிட்டுவந்தார். சிலகாலஞ் சென்ற பின்னர், உதிர்ந்த பழங்களைக் காட்டிலே சென்று எடுப்பதையும் நிறுத்தித் தாம் இருக்கும் இடத்திலே மரங்களிலிருந்து விழும் பழங்களை மட்டும் சாப்பிட்டுவந்தார். கிலேசங்களை வெல்லுதல்

இவ்வாறு உணவைக் குறைத்துக்கொண்ட கௌதம முனிவர், தமது மனத்தில் உள்ள கிலேசங்களை (குற்றங்களை) வெல்வதற்காக, அக்காலத்துத் துறவிகள் செய்துவந்த வழக்கப்படிக் கடினத் தபசுகளைச் செய்யத் தொடங்கினார். பற்களை இறுகக் கடித்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு வாயின் அண்ணத்திலே நாவை நிறுத்தித் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை மனத்தில் நிறுத்திக் கடுமையான தபசு செய்தார். அப்போது அவருடைய உடம்பில் வலி ஏற்பட்டது. பலமுள்ள ஒரு ஆள் பலமில்லாத ஒருவனைப் பிடித்துக் குலுக்கி ஆட்டுவது போல் இவருடைய உடம்பில் வலி உண்டாயிற்று. அக்குளில் (கைக் குழிகளில்) வியர்வை ஒழுகிற்று. ஆனாலும் கௌதம முனிவர் தமது முயற்சியை விடவில்லை.

அப்பிரணத் தியானம்

பின்னர் அப்பிரணத்தியானம் செய்யத் தொடங்கினார். அதாவது மூச்சையடக்கும் பயிற்சி செய்யத் தொடங்கினார். மூக்கையும் வாயை யும் இறுக மூடிக் கொண்டு மூச்சை அடைத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது, தோல் துருத்தியிலிருந்து காற்று புஸ்ஸென்ற ஒலி யுடன் வெளிப்படுவதுபோன்று, இவருடைய காதுகளின் வழியாக மூச்சு