உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

"தேவர்களும் என்னை எதிர்க்கத் தைரியம் இல்லாத போது, மனிதனாகிய நீ மட்டும் எக்காரணத்தினால் அச்சமில்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டான் மாரன்.

"பத்துப் பாரமி1 தர்மங்களை நிறைவேற்றினவன் ஆகையினாலே உன்னிடத்தில் எனக்கு அச்சம் இல்லை” என்று கூறினார் போதி சத்துவர்.

"நீர் பாரமிக புண்ணியங்களை நிறைவேற்றினது யாருக்குத் தெரியும்? அதற்குச் சான்று உண்டா?" என்று கேட்டான் மாரன்.

போதிசத்துவர், “மாரனே! நான் சான்று காட்ட வேண்டி யதில்லை. ஆனாலும், நீ கேட்கிறபடியினாலே சான்று காட்டு வேன். ஒரு வெஸ்ஸந்தர ஜன்மத்திலே நான் தானங் கொடுத்த போது ஏழு தடவை பூமி அதிர்ச்சிக்கொண்டது உண்மை என்பதை இந்தப் பூமிதேவி சான்று கூறுவாள்” என்றுகூறி, சீவர ஆடையின் உள்ளே இருந்த தமது கையை வெளியில் எடுத்துப் பூமியைச் சுட்டிக் காட்டினார்.

அப்போது பூமியானது பயங்கரமான ஓசையுடன் ஆறு தடவை அதிர்ந்தது. இதைக் கண்டுங் கேட்டும் அச்சங்கொண்ட மாரன் தன்னுடைய கொடியை எடுத்துக்கொண்டு சேனையுடன் ஓடிப் போனான். இவ்வாறு சூரியன் மறையுமுன்பே, போதி சத்துவர் மாரனை வென்று வெற்றி பெற்றார். இந்தப் போரை வெகு தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரமர்களும் தேவர்களும் போதிசத்துவர் வெற்றி பெற்றதைக்கண்டு, “துக்கமற்ற புண்ணியவான்களே! சித்தார்த்த போதிசத்துவருக்கு வெற்றி கிடைத்தது! வசவர்த்திமாரன் தோல்வி யடைந்தான். ஆகையினாலே, ஜய மங்கள விழாவையும் புத்த மங்கள விழாவையும் ஒருங்கே கொண்டாடுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டே எல்லோரும் போதி மரத்தருகே வந்தார்கள்.

அப்போது ஆயிரம் கதிர்களையுடைய பொன்தட்டு ஒன்று தண்ணீரில் அமிழ்வதுபோல சூரியன் மேல் கடலில் மூழ்கினான். முழுநிலா பால்போன்ற ஒளியை எங்கும் வீசிக்கொண்டு ஆகாயத்திலே காணப்பட்டது. தூய்மையான வானத்திலே விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சி போதி சத்துவருக்கு அமைக்கப்பட்ட விதானம்போலத் தோன்றியது. வானமும் பூமியும் சேர்வதுபோல