உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

-

/ 83

ளி

இரத்தம் தூய்மை பெற்று அதிலிருந்து பொன்னிறமான ஒளி வெளிப்பட்டது.)

மேலே சொன்ன ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி முதலிய விஷயங்களை ஞானத்தினாலே ஆராய்ந்து பார்த்தபோது திருஷ்ணை, திருஷ்டியை, மானம் என்கிறவைகளுக்கு அவை ஆதாரமாக இருக்கிற படியினாலே அது மோக்ஷ மார்க்கத்துக்கு வழியாகாது; ஆகவே, இந்தப் பாதையைவிட்டு நீங்கி விதர்சனா பாதையில் செல்வதே நல்வழி என்று அறிந்தார். இவ்வாறு நன்நெறி தீநெறிகளைக் கண்டு, ஆலோகம் முதலானவைகளிலே மனத்தைச் செலுத்தாமல் விதர்சனா பாவத்திலே மனத்தைச் செலுத்துவது மோக்ஷ மார்க்கம் என்பதைக் கண்டார்.

இவ்வாறு இவர் கண்ட இதற்கு 'மார்க்கா மார்க்க ஞான தர்சன விலத்தி' என்பது பெயர்.

விதர்சன நெறியில் சென்ற போதிசத்துவர். பிறகு அநித்தியம், துக்கம், அனாத்மம், அசுசி என்பவற்றைச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்த போது பஞ்ச ஸ்தந்தங்களின் தோற்றத்தையும் அழிவையுங் கண்டார். இதற்கு 'உதய வியய ஞானம்' என்பது பெயர்.

இவ்வாறே போதிசத்துவர் முறையே பஞ்சானு தர்சன ஞானம், பயதோபஸ்தான ஞானம், ஆதீனவ ஞானம், முக்திகாமதா ஞானம், பிரதி சங்க்யானுதர்சன ஞானம், சம்ஸ்காரரோபேக்ஷா ஞானம் முதலிய ஞானங்களை யடைந்தார். பிறகு சத்யானுலோம ஞானம் உண்டாயிற்று. பிறகு, பிருத்தஜ்னா கோத்ராவஸ்தையைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டே கோத்ரபூ ஞானம் கிடைக்கப் பெற்றார்.

கோத்ரபூ ஞானம் மனதில் தோன்றி மறையும் போது துக்கத்தைப் பார்த்துக்கொண்டே சமுதயத்தை நீக்கிக் கொண்டே நிரோதத்தைப் பாவித்து உறுதிப்படுத்திக்கொண்டே மார்க்க சத்தியத்தை அனுசரித்துக் கொண்டே முதலாவது ஞானதரிசனம் பெற்றார். அதாவது ஸ்ரோதபத்தி மார்க்க ஞானம் பெற்றார்.

அதன் பிறகு ஸ்ரோதாபத்தி பலனும் பிறகு மார்க்கப்ரத்திய பேக்ஷன ஞானமும், பலப்ரத்தியவேக்ஷண ஞானமும், ப்ரஹீனக்லேச ப்ரத்தியவேக்ஷண ஞானமும், வத்யக்லே சப்ரத்திய வேக்ஷண ஞானமும் உண்டாயின.