உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

நல்லகுணமுடையவர்களையும் தீயகுணமுடையவர்களையும், போதனையை அறிந்து கொள்ளக் கூடியவர்களையும் அறிந்துகொள்ள முடியாதவர்களை யும் கண்டார்.

தாமரை படர்ந்துள்ள பெரிய குளத்திலே நீர்மட்டத்துக்கு மேல் வந்துள்ள முதிர்ந்த தாமரை மொட்டுகள் சூரியக்கிரணம் பட்டவுடன் மலர்ந்து விரிகின்றன. சில மொட்டுகள் சிலநாள் கழித்து முதிர்ச்சி யடைந்தவுடன் சூரியக்கிரணம் பட்டு மலர்கின்றன. இன்னும் சில மொட்டுகள் நீருக்குக் கீழே இருக்கின்றன. அவை வளர்ந்து முதிர்ந்து நீர்மட்டத்துக்கு மேலே வந்து சூரிய கிரணத்தினால் மலர்ச்சியடை கின்றன. இதுபோல, பகவன் புத்தர், ஞானக்கண் கொண்டு உலகத்தைப் பார்த்தபோது அறிவு நிரம்பிய மனிதரும், சற்று அறிவு மழுங்கிய மக்களும், மற்றும் அறிவு குன்றிய மக்களும், அறிவே இல்லாத மக்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அறிவுக்கண் பெற்றால் ஞானத்தை யறியும் ஆற்றல் பெறுவார்கள் என்பதையும் அறிந்தார்.

இவ்வாறு கண்ட பகவன் புத்தர், சகம்பதி பிரமனைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “அறநெறியை அறிந்து கொள்ளு கிறவர்களுக்கு அழியாத்தன்மையுள்ள நிர்வாண மோக்ஷத்தின் கதவு நன்றாகத் திறக்கப்பட்டிருக்கிறது. காதுடையவர்கள் கேட்கட்டும். இனியதும் நல்லதும் ஆகிய அறநெறியை, நான் போதிக்காமல் இருக்க எண்ணிய தர்மத்தை, உலகத்திலே போதிக்கப் போகிறேன்.'

و,

பகவன் புத்தர், உலகத்திலே தர்மோபதேசம் செய்ய உடன்பட்ட ருளியதையறிந்த சகம்பதி பிரமன் மிகவும் மனம் மகிழ்ந்து, பகவரை வணங்கி வலம்வந்து தமது பிரமலோகத்துக்குப் போய்விட்டார். கேட்பவர் யார்?

அதன் பின்னர், பகவன் புத்தர், “முதன் முதலாக யாருக்கு உபதேசம் செய்யலாம். உபதேசத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர் யார்?" என்று தமக்குள் யோசித்தார். அப்போது, ஆலார காலாமர் என்னும் முனிவர் தம்முடைய உபதேசத்தை அறிந்து கொள்ளக் கூடியவர் என்று கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று ஞானக் கண்ணால் பார்த்தபோது, அவர் இறந்து இப்போது ஒருவாரம் கிறது என்பதை அறிந்தார். பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது, உத்ரகர் என்னும் முனிவர் தர்மோபதேசத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர் என்பதைக் கண்டு,

"