பக்கம்:மருதநில மங்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100புலவர் கா. கோவிந்தன்


மகிழவும் ஓய்வில்லை . ஓய்வற்று உழலும் என்னை , நீயும் நினைத்துப் பார்ப்பதில்லை!” என்று கூறி அன்பால் கண்டித்தாள். பின்னர், “மகனே! உன் மழலை மொழி கேட்டு மகிழும் என் உள்ளத்தை மேலும் மகிழ்விக்கும் வண்ணம், அறுசுவை கூடிய இனிய உணவை உண்டவர், அதற்கு மேலும் அமிழ்தம் உண்டு மகிழ்தல்போல், நானும் மகிழுமாறு, மழலை மொழி வழங்கிய உன் வாயால், உன்னைப் பேணி வளர்க்கும் பேரன்பு மிக்க செவிலியர், ஆடல் பாடல் துணையால் கற்றுத் தந்த சொற்களைத் திருந்தக் கூறி என்னைத் தித்திக்கப்பண்ணுவாய்!” என்று கூறி ஏங்கினாள்.

அவள், அவனைத் தன் முகத்திற்கு நேரே நிறுத்தி, அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுது, ஆங்கு வந்த அவள் கணவன், தன் வருகையை அவள் அறிந்து கொள்ளாவாறு அவள் பின் ஒளிந்து நின்றான், அவ்வாறு ஒளிந்து கொண்டதோடு, தன் மனைவியின் முன்னும், மகன் பின்னும் நின்று, தன் வருகையைப் பார்த்துவிட்ட தோழியையும், தன் வருகையை அறிவியாவாறு, கை அமர்த்தி அடக்கி விட்டான். அதனால், அவன் வருகையை அவன் மனைவி அறிந்திலள். தாய் தன்னை முன்னே. நிறுத்தி, அதைக் கூறிக் கொண்டிருக்குங்கால், மகன் தாயின் பின் வந்து நிற்கும் தந்தையைக் கண்டு கொண்டான். அதனால், தாய் கேட்பதை மறந்து, “அப்பா! -அப்பா!” என இரைந்து அழைக்கத் தொடங்கி விட்டான்,

அவள், மகன் செயல் கண்டு மருண்டாள், அவன் அவ்வாறு கூறுவது ஏன் என அறியாது ‘ விழித்தாள். அவனை வாரி எடுத்துத் தன் தோள் மீது கிடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/102&oldid=1129665" இலிருந்து மீள்விக்கப்பட்டது