பக்கம்:மருதநில மங்கை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118புலவர் கா. கோவிந்தன்


இளையவர் தழுஉஆடும் எக்கர்வாய் வியன் தெருவின்
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்.
உளைவுஇலை; ஊட்டல் என் தீம்பால் பெருகும் அளவெல்லாம் 5
நீட்டித்த காரணம் என்?
கேட்டி:

பெருமடல் பெண்ணைப் பினர்தோட்டுப் பைங்குரும்பைக்
குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கித் தளரும்
பெருமணித் திண்தேர்க் குறுமக்கள் நாப்பண் 10
அகன்நகர் மீள்தரு வானாகப், புரிஞெகிழ்பு,
நீல நிரைப்போது உறுகாற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர், உயர்சீர்த்தி
ஆல்அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்

கால்கோள் என்று ஊக்கிக், கதும் என நோக்கித் 15
திருந்தடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,
கண்ணும் நுதலும் கவுளும் கவ்வியார்க்கு
ஒண்மை எதிரிய அங்கையும் தண்ணெனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, ‘இவ்இரா

எம்மொடு சேர்ந்து சென்றிவாயால்; செம்மால்! 20
நலம் புதிதுஉண்டு உள்ளா நாண்இலி செய்த
புலம் எலாம் தீர்க்குவேம்மன்!’ என்று இரங்குபு
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி

ஒள்இழாய்! யான் தீது இலேன், 25
எள்ளலான், அம்மென் பணைத்தோள் நூமர் வேய்ந்த கண்ணியோடு
எம்இல் வருதியோ? எல்லா! நீ தன்மெய்க்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/120&oldid=1129788" இலிருந்து மீள்விக்கப்பட்டது