பக்கம்:மருதநில மங்கை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152புலவர் கா. கோவிந்தன்


நீஉறும் பொய்ச்சூள் அணங்காகின், மற்றுஇனி 20
யார்மேல் விளியுமோ? கூறு."

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தன் பிழையை மறைக்கப் பொய்ச் சூள் உரைக்கத் துணிந்தமை கண்டு, தலைவி, பொய்ச் சூளால் வரும் கேடஞ்சி, ஊடலைக் கைவிட்டது.

1. ஒரூஉ –நீங்க; குரல்–மயிர்; 2. மொய்ம்பின–தோளின்கண் உள்ள; 3. தொடிய தொட; பெரியார்–பிரியும் ஆற்றல் வாய்ந்தவர்; 5. கடியர்–கொடிய கோபம் உடையவர்; 6. வாயல்லா–உண்மை அல்லாத; வெண்மை –பொய்; 7. மருள்வார்–உண்மை எனப் பிறழக் கருதுவார்; 8. நின்கண்–உன்அருள்; 9. என்கண்–என்னிடத்தில்; 10. புள்ளிக்களவன்–புள்ளிகள் நிறைந்த நண்டு; சேர்பு ஒதுக்கம்–சேர்ந்து செய்த வரிகள்; 11, வள்உகிர்–கூரிய நகம்; வாள் எயிறு–வெள்ளிய பற்கள்; 12. நல்லார்–பரத்தையர்; 13. சிரறுபு–கோபித்து; சீற–அடிக்க; 14. சாலாவோ–போதாவோ; 15. ஓராதி–ஆராய்ந்து பார்க்காதே, 16. தேற்றங்கண்டீயாய்–தெளிவாயாக; தெளிக்கு–தெளிவிப்பேன். 18. தெரிகோதை–ஆராய்ந்து தொடுத்த மாலை; 19. தவறஞ்சி– நீ செய்தவறிற்கு அஞ்சி; போர் மயங்கி நான் தொடுத்த போரால் நீ அறிவு மயங்கி; 21. விளியும் அழியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/154&oldid=1130026" இலிருந்து மீள்விக்கப்பட்டது