பக்கம்:மருதநில மங்கை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31


அறிந்தேன், உன் குதிரையை!

ர் அரசிளங் குமரன், தன் ஆருயிரனைய மனைவியோடு, மனையற வாழ்வு மேற்கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திருந்தான். ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவன், ஆங்கே ஓர் இளம் பரத்தையைக் கண்டு, அவள் அழகிற்கு அடிமையாகி அறிவிழந்தான். அவள் பின் சென்று, அவளோடு ஆடிப்பாடி அக மகிழ்ந்தான். அவன் மனைவி, நாள் சில கழியவும், கணவன் வாராமையால் கலங்கி, அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தாள். அந் நிலையில் அவனும் வந்து சேர்ந்தான். அவன் வருகையைத் தொலைவிலேயே கண்டு களிமகிழ் கொண்டாள். அவனை எதிர் கொண்டழைக்க விரைந்து வாயிலை அடைந்தாள். ஆனால், அந்தோ! அவள் கண்ட அவன் காட்சி, அவளை அழப்பண்ணிற்று. அவன் மார்பின் அழகைக் கண்டு, அவன் மொழியின் இனிமை கேட்டு, மகிழத்துடித்தவள், அவனை அணுகவும் அஞ்சினாள். அவன் ஆடைகள் மடிப்புக்குலைய, கரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/209&oldid=1130218" இலிருந்து மீள்விக்கப்பட்டது