பக்கம்:மருதநில மங்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88புலவர் கா. கோவிந்தன்


மலர்நாறும் மார்பினை ஈங்கு எம்இல் வருவதை?
பெயின்நந்தி, வறப்பின்சாம் புலத்திற்குப் பெயல்போல் யான்

செலின்நந்திச், செறின்சாம்பும் இவள்என்னும் தகையோ, தான், 20
முடியுற்ற கோதைபோல் யாம் வாட, ஏதிலார்
தொடிஉற்ற வடுக்காட்டி ஈங்கு எம்இல் வருவதை?

ஆங்க,
ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,
வெய்யாரும், வீழ்வாரும் வேறாகக், கையின் 25
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகையின்றே;
தண்பனிவைகல் எமக்கு.”

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனுக்கு வாயில்விட மறுக்கும் தலைவி ஊடிக் கூறியது இது.

1. பழனம்–வயல், 2. இமிர்பு–ஆரவாரம் செய்து; இருந்தும்பி–கரியதேன்வண்டு 3. உண்துறை–நீர் உண்ணும் துறை, 4. தலைவந்தென–ஆங்கே வந்ததாக, 5. ஒரீஇ–போய்; காக்கிற்பான்–காப்பவன், 6. இரைகொள்ளும்–தங்கும்; 7. அலமரும்–வருந்தும்; மொய்தப–பகைவன் பலம் கெடுமாறு; 8. இறை–அரசன், 10. பறைதவிர்பு–பறத்தலைக் கைவிட்டு அசை விடுஉம்–இளைப்பாறும்; 11. சாய்ந்து–கெட்டு, பூத்து–நிறைந்து: தகை–தகுதிப்பாடு;13. எரிஇதழ்–எரிநிறம் கொண்ட இதழ்; சோர்ந்து உக–வாடிஉலர; 14. கரி–சான்று வருவதை–வருகின்ற தன்மை; 15. சுடர்–ஞாயிறு, படின்–மறையின்; கூம்பும்–வாடும், 16. தொகும்–மறையும், 17. கைம்மிக – அளவிறந்து பெருக, 19. நந்திசெழித்து, சாம்–வாடும் 20. செறின்–செல்லாமல் வருத்தினால், சாம்பும்–கெடும்; 24. ஐய–வியப்புடைய புக்கிமோ–சென்று சேர்க; 25. வெய்யார்– விரும்பப்படுவார்; வீழ்வார்–விரும்புவார்; 26. முயக்கின்–கூட்டத்தால், தகை இன்று–அழகு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/90&oldid=1129864" இலிருந்து மீள்விக்கப்பட்டது