பக்கம்:மருதாணி நகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மருதாணி நகம்

திரும்பினர் பூவத்தக்குடி சொ. மு. செட்டியார். அவரைக் கண்ட மறுகணத்தில் இன்னுெரு முகத்தையும் பஞ்ச வர்ணம் கண்டாள். ஆ மச்சான்!” என்று தன்னையும் மீறிய பாவனையாக, வாய்விட்டுப் பேசிவிட்டாள். நிலைப் படியில் தொங்கிக் கொண்டிருந்த முதற் கதிர் வரிசையை விலக்கிவிட்டு, முகம் நிமிர்த்திப் பார்த்தபடி நின்ருன் முத்தையன். சுருட்டைமுடி விம்மிக் கிடந்தது. மீசை துடித்தது. நெற்றி மேட்டிலே கட்டு ஒன்று போடப்பட் டிருந்தது. அவன் அவளைப் பார்த்தான். நெஞ்சின் கணிவைத் தூவி நின்ருனு ? வஞ்சத்தின் கனியை ஏந்தி நின்ருனு ?

பஞ்சவர்ணத்தின் தலை தன் போக்கிலேயே தாழ்ந் தது. ஒதுங்கி நின்ற கோவிந்தம்மாவை உடனழைத்துக் கொண்டு புறப்படத் தொடங்கினுள். "நான் போயிட்டு வாரேங்க!' என்று சொல்லிக்கொண்டாள்.

"நானுகூட ஒன் வூட்டை நாடி வாரேன் தாயி!” என்று பொக்கைவாய்ச் சிரிப்புடன் வார்த்தைகளைக் கொட்டினுள் முத்தையனின் அன்னை.

பஞ்சவர்ணம் மூரல் நகை முகிழ்த்து, வழி திரும்பி, விழி மீண்டு, வழி திரும்பினுள். நிழலும் தொடர்ந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/94&oldid=611999" இலிருந்து மீள்விக்கப்பட்டது