பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soft sore

1010

somatochrome


பின்பக்கம் உள் நாக்குவரை உள்ள வாயின் மேற்கூரையின் பின்பக்க தசைப்பகுதி.

soft sore : கிரந்திச் சீழ்ப்புண்; மேகப்புண்; மென்கிரந்தி : தொற்று மூலம் உண்டாகும் கிரந்தி நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப்புண்.

soft x-rays : மென்கதிர்கள் : நீள அலைவரிசையும் குறைவான ஊடுருவு திறன் கொண்ட.

solar : சூரிய : 1, சூரியன் தொடர்பான, 2. பெரும் பரிவு நரம்புப் பின்னலும், அதன் நரம்பு முடிச்சுகளும் அதிலிருந்து செல்லும் நரம்புகளும்.

solar plexus : உந்தி நரம்பு முடிச்சுவலை; மேல் வயிற்று வலை : அடிவயிற்று உறுப்புகளில் ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும் பரிவு நரம்புகள். இழைமங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல் அமைபபு.

solpadeine : சோல்பாடைன் : கோடைன், காரஃபீன் ஆகியவற்றுடன் கூடிய கரையக் கூடிய பாராசிட்டாமால் என்ற மாத்திரைகளின் வணிகப் பெயர்.

soluble : கரையத்தக்க : கரையும் தன்மையுடைய.

solute : கரைவம், கரைபொருள் : ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள்.

solution : கரைசல் : ஒரு கரை பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவம். பூரிதக் கரைசல் என்பது, ஒரு திரவத்தில் ஒரு பொருள் எவ்வளவு அதிகமாகக் கரையக்கூடுமோ அவ்வளவு கரைந்துள்ள திரவமாகும். ஒரு கரைசல் பூரித மடைந்தபின் அதில் கரை பொருள் அதற்கு மேல் கரையாது.

solvent : கரைமம் (கரைப்பி); கரைப்பான் : மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம்.

soma : உடல் : 1. மனதிலிருந்த வேறுபட்ட உடல், 2. உடல் திசுக்கள். 3. அணு உடலம்.

somasthenia : உடல்சோர்வு : நாள்பட்ட வலுவின்மையும், களைப்படையும் தன்மையும்.

somatesthesia : உடலுணர்வு : உடலொன்று இருப்பதை உணரும் நிலை.

somatic : உடல் சார்ந்த : உடற்கூறு தொடர்புடைய.

somatic death : உடம்பழிவு.

somatochrome : உடலணு :உட்கருவைச் சுற்றி நன்கமைந்த அணுஉடலம் கொண்ட நரம்பணு.