பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virilization

1154

visceroptosis


virilization : ஆண்மை திரிபாக்கம் : ஆண்மையூக்கி அளவுக்கு அதிகம் சுரப்பதால் பெண்ணில் ஆணுக்கான வரு நிலை பாலினப் பண்புகள் வளர்தல் ஆண்மயிர்முளைப்பு, பொட்டுப்பகுதி சொட்டை, குரல் ஆண்போலாதல், பரு, பெண்குறிபெரியதாதல் ஆகிய தன்மைகளாகும்.

virion : வைரியன் : அடிப்படை வைரஸ் புரதத் துகள்.

virocyte : வைரஸ்ணு : வைரஸ் தொற்றுகளால், இயல்பற்ற பெரிதான நிண அணுக்கள் நுரைய உயிரணுக் கூழ்மம் மற்றும் பருவெட்டான உயிரணு இனக்கூறு.

viroid : நச்சுயிர் போன்ற : உயர் நிலை தாவரங்களில் நோயுண் டாக்கும் ஒரிழை ஆர்.என்.ஏ யின் ஒரு சிறு துண்டுப்பகுதி.

virologist : நச்சுயிரியலார் : நச்சுயிரியலில் சிறப்பு வல்லுநர்.

virology : நோய் நுண்நச்சாய்வியல் : நோய்க் கிருமிகள், அவற்றால் உண்டாகும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

virosis : நோய் நுண்ம நச்சுத் தொற்று.

virucide : நச்சுயிர் அழிப்பு : வைரஸை அழிக்கும் பொருள்.


virulence : வீரிய நச்சுப்ப்கைமை : தொற்றுப் பண்ப மிகைத்தல்; கருவிசை நச்சுத் தன்மை.

virus : நோய்க்கிருமி (நோய் நுண்மம்); நச்சு நுண்ணுயிரி : மிக மிகச் சிறியதான, பாக்டீரியா வைவிடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் கிருமி உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண்டாக்க லாம். ஆனால் உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உண்டாக்கும். சன்னிக் காய்ச் சல், அம்மை, நாவெறி நோய், இளம்பிள்ளை வாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன.

viscera : உள்ளுறுப்புகள் : மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உடலின் உட்கிட உறுப்புகள்.

viscero : உள்ளுறுப்பு சார்ந்த : உடலுறுப்புகள் பற்றிய குறிப்பாக உடல் தண்டுப்பகுதியில் சீரக்குழிவறைகளுக் குள்ளிருக்கும் பெரும் உறுப்புகள்.

visceroptosis : உறுப்பு இறக்கம்; உள்ளுறுப்புப் பிறழ்வு; உள்ளுறுப்புத் தொய்வு : அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கி இறங்கி இருத்தல்.