பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

burst

233

butterfly needle


burst : திடீர் உணர்வுத் தாக்கம்; குபீர்ப்பாய்ச்சல்; வெடித்தல்; உடைவு; தகர்வு; தெறிப்பு; அணு வெடிப்பு : நச்சுயிரிகளைப் பெற்றிருக்கும் அணு வெடித்துச் சிதறும்போது, அதிலிருந்து நச்சுயிரிகள் வெளியேறுதல்.

திடீரியங்கு மருத்துவம் : இயக்க ஊக்கி மருந்தினை மிக அதிக அளவில் நோயாளிக்குத் தரப்படும் மருத்துவ முறை.

bursting fracture : வெடித்துச் சிதறும் முறிவு : எலும்பு முறிவு அடைந்து சிதறுதல்; முறிவு அடைந்த எலும்பு தூள்தூளாக சிதறுதல்.

Burul ulcer : தோலடித்தி மரிப்புப் புண் : 'மைக்கோ பேக்டீரியம் அல்சரன்ஸ்' எனும் நுண்ணுயிரியால் தோலடித் திசுக்களில் ஏற்படும் தோல் அழிவுப்புண்.

buscopan : பஸ்கோப்பான் : ஹயோசின் எனப்படும் வழிப் பொருளின் வணிகப் பெயர் உணவுப்பாதைப் புண்ணின் போது தசையைச் சமனப் படுத்துவதற்குப் பயன்படுகிறது. இதனை ஊசி மூலம் செலுத்தினால், மிகவும் பயனளிக்கும்.

busulphan : புசல்ஃபான் : உயிர்ம நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்.

butacaine : பூட்டாக்கைன் : கோக்கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, கோக்கைன் போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வது இல்லை.

butment : மூட்டிணைவு மூட்டு.

butobarbitone : பூட்டோபார் பிட்டோன் : விரைவில் துயிலுட்டக் கூடிய ஒருவகை மருந்து.

butterfly bandage : வண்ணத்துப் பூச்சிக் கட்டு; வண்ணத்துப்பூச்சி கட்டுத்துணி : காயங்களை மறைப் பதற்காக சுட்டப்படும் துணிக் கட்டு.

butterfly fragment : வண்ணத்துப் பூச்சி முறிதுண்டு : பெரிய எலும்பு முறிந்து சிதறும்போது வண்ணத்துப் பூச்சி வடிவத்தில் பிரிந்து வந்து விட்ட முறிந்த துண்டு. பல கூறுகளாக முறிந்த எலும்பில் மீந்த பகுதி. ஆப்பு வடிவத்தில் முறிந்து பிரிந்து வந்துவிட்ட துண்டுப் பகுதி.

butterfly needle : வண்ணத்துப் பூச்சி ஊசி : வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்ட ஊசி. சிறு குழந்தைகளுக்குச் சிரை