பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calcitriol

240

calculus-biliary


(ஹார்மோன்). இது இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவை முறைப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

calcitriol : கால்சிட்டிரியால் : வைட்டமின் டி என்ற வளர்சிதை வினை மாற்றப்பொருள். இது குடலில் கால்சியமும் ஃபாஸ்பேட்டும் உறிஞ்சப்படுவதையும் எலும்புத் திசுக்களில் அவை படிவதையும் ஊக்கு விக்கிறது.

calcium : கால்சியம் சுண்ணம் (Ca) : சுண்ணாம்பு, ஒர் உலோகத் தனிமம். அணு எண் 20, அணு எடை 20, சுண்ணாம்புக்கல்லின் முக்கியமான அமைப்பான்.

calcium channel blocker : கால்சியம் தடுப்புப் பொருள் : தசை உயிரணுக்களினுள் கால்சியம் அயனிகள் பாய்வதைத் தடுக்கிற மருந்துகளின் குழுமம் எதுவும். இந்த மருந்துகள், இதயக்குத்தல், மிகை அழுத்தம், இதய விரைவுத் துடிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

calcium chloride : கால்சியம் குளோரைடு : குருணை வடிவில் உள்ள கால்சியம் உப்புகளில் ஒன்று. நீரில் கரையக்கூடியது. கால்சியம் குறைபாட்டு நோய்க்கு உடலில் செலுத்தப்படுகிறது.

calcium gluconate : கால்சியம் குளுக்கோனேட் : பரவலாகப் பயன்படுத்தப்படும் கால்சியம் உப்புகளில் ஒன்று. கால்சியம் குறைபாட்டு நோய்கள் அனைத்திலும், ஈயநச்சு நிலையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

calcium lactate : சுண்ண (கால்சியம்) லாக்டேட் : கரையும் தன்மையுள்ள கால்சியம் உப்புகளில் ஒன்று. இது கால்சியம் குளோரைடை விடக்குறைந்த எரிச்சலூட்டும் இயல்புடையது. கால்சியம் குறைபாட்டு நோய்கள் அனைத்திலும் கால்சியம் குளுக்கோனேட் போன்று வாய் வழியாகக் கொடுக்கப்படுகிறது.

calcium oxalate : சுண்ண (கால்சியம்) ஆக்சாலேட் : இது ஒருவகை உப்பு. இது சிறுநீரில் அதிகச் செறிவுடன் இருந்தால். சிறுநீர்க் கல்லடைப்பு உண்டாகும்.

calciuria : சிறுநீர்க் கால்சியம் : சிறுநீரில் கால்சியம் இருத்தல்.

calculus : கல்லடைப்பு; உடல் கல்காரை : உடலின் உள் உறுப்புகளில் உண்டாகும் கல் போன்ற தடிப்பு. இது முக்கியமாகத் தாதுப் பொருள்களினாலானது. இது சுரப்புப்பாதைகளில் அல்லது உட்குழிவுகளில் ஏற்படுகிறது.

calculus-biliary : பித்தக்கல்.