பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dentate

372

deossification


பாக்டீரியாக்கள் திரண்டு காரையாகப் படிதல்.

dentate : பல்லுள்ள : பற்களைக் கொண்டிருக்கிற.

denticle : சிறுபல்.

dentifrice : பற்பசை; பற்பொடி : பல்துலக்க உதவும் பொருள்.

dentine : பற்காழ்; பல்திசு : பல்லின் பெரும் பகுதியான காழ்க்கூறு. பற்களில் உண்டாக்கப் பட்டிருக்கும் எலும்பு போன்ற பல் திசு.

dentist : பல் மருத்துவர்.

dentition : பல் முளைப்பு; பல் அமைவு; பல் அமைப்பு : பல் வரிசையைக் குறிக்கிறது. மனிதரிடம் பருவத்தில் வாழத்தக்க பற்கள் பாற்பற்கள் எனப்படும். இவற்றின் எண்ணிக்கை பொதுவாக 20 வயது வந்தவர்களுக்குப் பொதுவாக 32 பற்கள் உள்ளன. இவை இரண்டாம் நிலைப் பற்கள் எனப்படும்.

denture : பல் தொகுதி; கட்டுப் பல்; பற்கட்டு : செயற்கைப் பல் தொகுதி.

denudation : புறணி நீக்கம்; தோல் நீக்கம் : அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது நோய்க்குண நிலை மூலம் காப்புப் படலத்தை அல்லது உறையை நீக்குதல்.

Denver shunt : டென்வர் தடமாற்றம் : வயிற்று உறுப்பு உறை சார்ந்த சிரையில் தடமாற்றம். இது மகோதரத்தைத் தளர்த்தி, சிறு நீரகத்தின் செயற்பாட்டை மேம்படுத்துகிறது.

deodorant : மணமகற்றும் மருந்து; நாற்றம் போக்கி; நாற்றம் அகற்றி; வாடை முறி : அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன.

deontology : மருத்துவ அறிவியல் : மருத்துவம் பற்றிய ஒழுக்கவியல்.

deossification : எலும்பு கனிம நீக்கம் : எலும்பிலிருந்து கனிமப் பொருள் இழக்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல்.