பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A

abacterial : நுண்ணுயிரிலா; நுண்ணுயிரற்ற, பாக்டீரியா சாரா வீக்கம்: பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல்.

abalienation : மனக்குழப்பம் .

abandon : தங்குதடையிலா மனப்பான்மை; கவலையிலா மனநிலை; உதறித்தள்ளு.

abandoning: கைவிடல்,கைநெகிழ்த்தல்.

abarognosis:: சுமை உணர்வின்மை; எடை உணர்வின்மை; பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு: பளு உள்ளதை உணர இயலாமை.

abarthrosis: அசையும் மூட்டு : உடலிலுள்ள எலும்பு மூட்டுகளில் அசைகின்ற மூட்டுவகை.

abasia : நடக்க இயலாமை; நடக்காமை நரம்புகளின் ஒத்திசைவு இன்மையால் நடக்க இயலாத நிலைமை.

abate : தாழ்த்து, தணி, குறை: தள்ளுபடிசெய்; விலக்கிவை; வலுவிழக்கச்செய்; மட்டுப்படுத்து கட்டுப்படுத்து.

abatement : கட்டுப்படுத்தல் குறைத்தல், தணித்தல்.

abattar dissement : குறிப்பிட்ட உயிர்வர்க்கம் இல்லாமலாதல் abattoir : அடிதொட்டி; விலங்கு வெட்டுகளம்; இறைச்சி வெட்டுதொட்டி.

aleattoir sanitation :விலங்கு வெட்டுகளத் தூய்மை; அடிதொட்டித் துப்புரவு.

ABC: ஏபிசி வரிசை முறை: தொடர்நிகழ்வு முறை: இதய நுரையீரல் இயக்க மீட்பின் போது பாதிக்கப்பட்டவரின் காற்றுப் பாதை (சுவாசப் பாதை), சுவாச நிலை மற்றும் இதய இரத்த ஒட்ட இயக்கம் போன்றவற்றைச் சீராக்க உதவும் உயிர் காக்கும் தொடர் நிகழ்வுகள்.

abdomen: அடிவயிறு;அகடு; உதரம் : நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது. இது பெரும்பாலும் தசையினாலும்,