பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

endomyocardial biopsy

425

endostosis


வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு இரண்டிலும் பின்னொழுக்கு உண்டாகும்.

endomyocardial biopsy : இதயத் தசைத் திசு ஆய்வு : இதய உள் ளுறையிலும், அதன் கீழமைந்திருக்கிற தசையிலும் திசுத் துணித்தாய்வு செய்தல்.

endomyocardium : கருப்பை-நெஞ்சுப்பை தொடர்புடைய : கருப்பை-நெஞ்சுப்பைத் தசைப் பகுதி தொடர்புடைய.

endoneurium : நரம்பிழை இணைப்புத் திசு; அக நரம்பியம் : நரம்பிழைகளைச் சூழ்ந்திருக்கும் நுட்பமான உள்ளார்ந்த இணைப்புத் திசு.

'endonuclease : நீர்ப் பகுப்பான் செரிமானப் பொருள் : குறிப்பிட்ட உள்முக டி.என்.ஏ, ஆர்.என்.ஏ விந்தணுத் தொகுதிகளைத் தாக்குகிற நீர்ச்சேர்மப் பகுப்பான் வரிசையைச் சேர்ந்த செரிமானப் பொருள்களின் குழுமம் எதுவும்.

end-organ : முனை உறுப்பு :உணர்வு நரம்புகளில் உள்ள பொதியுறையுடைய முனை.

endoparasite : உடலக ஒட்டுண்ணி ; உடல் உள் ஒட்டுண்ணி; உடலக ஒட்டுயிர்; அக ஒண்டுயிர் : தாய் உயிரினுள் வாழும் ஓர் ஒட்டுண்ணி,

endophthalmitis : கண் உள்நோய்; கண் அகவழற்சி : கண்னின் உள்ளே ஏற்படும் நோய்.

endoplasm : ஊன்ம உள் கூழ்மம் : உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு.

endorphins : எண்டார்ஃபின் : மூளையில் உண்டாகும் எண்டார்ஃபின், லியூஎன்சிஃபாலின், மெட்என்சிஃபாலின், டைனார்ஃபின் போன்ற உள்வளர்ச்சிப் பெப்டைடுகள்.

endoscope : அக நோக்குக் கருவி; உள்நோக்குக்கருவி : உடலின் உட்புறத்தைக் காண உதவும் கருவி.

endoskeleton : அகஎலும்புருவம் : முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம்.

endosmosis : சவ்வுத்திரைக் கசிவு : சவ்வுத்திரையூடு கடந்த கசிவு.

endospore : தாய் உயிர்மக் கரு : தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக் கரு.

endosteum : மச்சை உட்சவ்வு : ஒர் எலும்பின் மச்சை உட்குழிவின் உட்புறப்பூச்சுச் சவ்வு.

endosteoma : மச்சைக்கட்டி : எலும்பின் மச்சை உட்குழிவில் ஏற்படும் ஒருகட்டி.

endostosis : தொடக்கக் குருத்தெலும்பு : குருத்தெலும்பின் தொடக்கத்தில் உருவாகும் எலும்பு.