பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enteroclysis

428

enteropathic arthritis


enteroclysis : குதவாய் நீர் நுழைவு; மலக்குடலில் நீர்மமேற்றல் : பெருங்குடல் அடிக்கூற்றினுள் (குதவாய்) நீர்மம் புகுதல்.

enteroclysis : சிறுகுடல் ஆய்வு : வேறுபாட்டினைக் காட்டும் உட்பொருளினை குடல் கழுவும் அழுத்தக் குழாய் கருவி மூலம் செலுத்தி சிறுகுடலை ஆராய்தல்.

enterocoele : உடல் உட்குழிவு : மூலக்குடல் நாளத்திலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பையினால் உண்டாகும் உடல் உட்குழிவு.

Enterococcus : குடற் கிருமி : மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பரவுகிறது.

enterocoiitis : குடல் வீக்கம்; குடல் அழற்சி : சிறுகுடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம்.

enterocolostomy : குடல் இணைப்பு : சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கு மிடையிலான அறுவைச் சிகிச்சை மூலம் இணைப்பு உண்டாக்குதல்.

enteroenterostomy : குருதி நாளப் பிணைப்பு : குடலின் இரு பகுதிகளுக்கிடையே அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு உண்டாக்குதல்.

enterogastritis : உணவுக்குழல் அழற்சி : இரைப்பையும், குடல் களும் வீக்கமடைதல்.

enterogastrone : என்டெரோகேஸ்டிரோன் : குடல் சளிச்சவ்வில் சுரக்கும் ஒர் இயக்குநீர். இது இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குள் உணவு செல்வதைக் கட்டுப்படுத்துகிறது.

enterokinanse : குடல்நீர் செரிமானப் பொருள் : குடல்நீரிலுள்ள ஒரு செரிமானப் பொருள்.

enterolith : குடற்கட்டி; குடற்கல்.

enteron : குடல் நாளம் : உணவு செரிமான அடிக்குழாய்.

enterolysis : உறுப்பிணைவுப் பிளவு : குடல் வளையங்களுக்கு இடையில் அல்லது குடலுக்கும் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உறுப்பிணைவில் செயல் முறை பிளவு உண்டாக்குதல்

enteropathogen : என்டெரோபேத்தோஜன் : குடல்களில் நோய் உண்டாக்கும் ஏதேனும் நுண்ணுயிர்.

enteropathogenic : குடல்நோய் சார்ந்த : குடல்களில் நோய் உண்டாக்குதல் தொடர்புடைய.

enteropathic arthritis : சிறுகுடல் அழற்சி : பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த