பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exteroceptor

exudation


exteroceptor : புறத்தூண்டல் நரம்பு முனையம் : உடனடியான புறச் சூழலினால் துண்டப்படுகிற ஓர் உணர்வு நரம்பு முனையம்.

extirpation : உறுப்பகற்றுதல்; வெட்டி நீக்கல்; அழித்தல் : ஒர் உறுப்பினை அடியோடு அகற்றி விடுதல்.

extracochlear implant : மிகைச்செவிச் சுருளை : மின் முனையத்தை ஒரு மையக் காதாகக் கொண்டுள்ள கேட்புச் சாதனத்தைப் பொருத்துதல்.

extract : செறிவுப் பொருள் : தீவிர அமைப்பான்களைக் கொண்ட ஒரு செறிவான தயாரிப்புப் பொருள்.

extraction : பல்பிடுங்குதல் : பல்லை வலிந்து பிடுங்குதல்.

extramedullary : மிகை எலும்பு மச்சை : எலும்பு மச்சைக்கு வெளியில், தண்டுவடத்திற்கு வெளியில்.

extramural : புற உறுப்பு : ஓர் உறுப்புக்கு வெளியே, ஒர் அமைப்பிற்கு வெளியே.

extrasystole : மிகைவேக நாடித்துடிப்பு; மிகைத் துடிப்பு : நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல்.

extravasation : நீர்மக் கழிவு; புறப்பொழிவு : நீர்மம், அதன் இயல்பான அடைப்பிலிருந்து சுற்றியுள்ள திசுக்களில் கசிதல்.

extravenous : நரம்புக்கு வெளியே : சிரைக்கு வெளியே.

extravascular : புறநாளம் : இரத்த நாளத்திற்கு வெளியே.

extravert extrovert : வெளியுலக ஈடுபாட்டாளர்; அயல்நோக்கி : புறப்பாங்கு : தன் ஆர்வங்கள், நடத்தை முறை அனைத்தும் மற்றவர்களையும், இயற்கைச் சூழலையும் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

extremity : இறுதி முனை : உடலின் இறுதி முனைப் பகுதிகள் (எ-டு): கால்விரல்கள்; கை விரல்கள், தோள், கை; முன்கை மணிக்கட்டு, இடுப்பு; தொடை; கால்; கணுக்கால்; பாதம்.

extrinsic : புற இயக்கம்; அயல் : தசைப் பற்றுகள் வகையில் உடல் முதலிலிருந்து கிளையை அல்லது அரைவளையத்தை நோக்கிச் செல்லுதல்.

exudate : கசிவுப்பொருள்; கழிவு : கசிவினால் உண்டாகும் பொருள்.

exudation : கசிதல்;வடிதல் : தந்துகிச் சுவர்கள் வழியாக நீர்மம், தோல் துளைகள் வழியாக வியர்வை கசிதல்.