பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fentazin

458

fertilization


fentazin : ஃபென்டாசின் : பெர்ஃபெனாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ferment : நொதிப்பு; புளியம்; நொதியமாக்கு; புளியமாக்கு : 1. புளித்துப் பொங்குதல். 2. நொதிப்பு உண்டாக்கும் ஒரு பொருள்.

fermentation : நொதித்தல்; நொதியமாக்கல்; புளியமாக்கல்; புளிப்பூக்கம்; நொதிப்பித்தல் : ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு செய்யப்படுகிறது.

Fernandez reaction : ஃபெர்னாண்டஸ் வினை : பெப்ரோமினுக்கு உண்டாகும் துரிதமான தோல் தடிப்புத் துலங்கல்.

ferrie : இரும்பு சார்ந்த : மூன்று இணைதிறன் கொண்ட இரும்பு அல்லது இரும்பு அடங்கிய பொருள் சார்ந்த.

Ferris Smith sinusectomy : ஃபெரிஸ் ஸ்மித் எலும்பு உட்புழை அறுவைச் சிகிச்சை : எலும்பு உட்புழைகளில் வடிகுழாயை அகலப் படுத்துவதற்குச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, அமெரிக்க செவி நோயியலறிஞர் ஃபெரிஸ் ஸ்மித் பெயரால் அழைக்கப்படுகிறது.

ferritin : ஃபெரிட்டின் : இரும்பின் ஒரு வடிவம். இந்த வடிவத்தில் உடல் திசுக்களில் இரும்பு சேமித்து வைக்கப்படுகிறது. இது அயன்-ஃபாஸ்பரஸ்-புரதத் தொகுதி.

Ferrivenin : ஃபெர்ரிவெனின் : வெல்லக்காடியின் காரச்சத்து சேர்ந்த அயஆக்சைடின் வாணிகப் பெயர். இது கடுமையான இரும்புச் சத்துக் குறைபாடுடைய சோகையாளிகளுக்கு ஊசி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

ferrous : அயக; அயம் (இரும்பு சார்ந்த) : இரு இணைதிறனுடைய இரும்பு அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். அயக ஃபியூ மெரேட், அயக குளுக்கோனேட், அயக சிசினேட், அயக சல்ஃபேட் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு. இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்த சோகைகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

ferrule : உலோகப் பூண் : ஒரு பல்லை வலுப்படுத்துவதற்காக அதன் வேர் துனியில் அல்லது நுனியில் இடப்படும் உலோக வளையம்.

fertile : கருவுறல்.

fertilization : கருவுறல்; கருத்தரித்தல்; கருவூட்டல் : விந்தணு கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்துதல்.