பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fever, rheumatic

460

fibroadenoma


fever, rheumatic : வாதக் காய்ச்சல்.

fever, typhoid : குடற்காய்ச்சல்.

Fibogel : ஃபைபோஜெல் : "ஹைடிஃபிலிக் ஜெல்" என்ற மருந்தின் வணிகப் பெயர்.

fibre : இழைமம்; நார்; இழை : இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு.

fibre, muscle : தசை நார்.

fibre, nerve : நரம்பிழை.

fiberoscope : இழைம மானி : உள்கட்டமைப்புகளைப் பார்த் தறிவதற்குப் பயன்படும் ஒரு நெகிழ் திறனுடைய கருவி. இதில் ஒரு உள் சுழல் தண்டு இருக்கும். அதில் ஒளி செல்லக் கூடியநெகிழ்திறனடைய இழைமங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

fibril : சிறு நாரியற்பொருள்; நுண் இழை; நாரிழை : தசைநார் நுண்ணிழை.

fibrillation : இதயத் தசைத் துடிப்பு; நார்த்துடிப்பு; உதறல்; குறு நடுக்கம் : தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இதனால் நாடித்துடிப்பு முழுவதும் ஒழுங்கின்றி இருக்கும்.

fibrin : கசிவு ஊனீர்; குருதி உறைவு; உறை புரதம் : கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீர்.

fibrinogen : கரையும் புரதம்; குருதி உறைவு ஆத்தி; உறை முன் புரதம் : இரத்தத்திலுள்ள ஒரு கரையும் புரதப்பொருள். இரத்தம் கெட்டியாவதற்கு இன்றியமையாத ஃபைப்ரின் என்ற கரையாத புரதம் இதிலிருந்து உற்பத்தியாகிறது.

fibrinogenopenia : இரத்தப் புரதக் குறைபாடு : இரத்தத்தில் கரையும் புரதப்பொருள் குறைவாக இருத்தல். இது பிறவியிலோ அல்லது நுரையீரல் நோய் காரணமாகவோ ஏற்படலாம்.

fibrinolysin : குருதி ஒழுக்கு செரிமானப் பொருள் : சிறிய காயங்களுக்குப் பிறகு உண்டாகும் இரத்தப் புரதப் பொருளை கரைக்கக் கூடிய ஒருவகை செரிமானப் பொருள் (என்சைம்) குருதி உறைவின்போது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

fibrinolysis : இரத்தப் புரதம் கரைதல் : இரத்தப்போக்குக்கு முன்பு இரத்தப் புரதப் பொருள் கரைதல். பொதுவாக, உடலில் குருதி உறைவுக்கும், இரத்தப் புரதம் கரைவதற்குமிடையே ஒரு சமநிலை இருந்துவரும்.

fibroadenoma : இழைநார்க் கட்டி; நார்கோளப் புற்று : இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி