பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fish mouth

464

flagellum


fish mouth : மீன் வாய் : முழு உடல் காழ்ப்பு நோயில் முகத்தில் தசைதடித்து சிறிய வாயுடைய இடைவெளி உண்டாதல்.

fish skin disease : மீன் தோல் நோய் : கொம்பு போன்று கெட்டி யான படலம் அதிகரித்து, சுரப்புகள் குறைந்து ஏற்படும் ஒரு தோல் நோய். தோல் கெட்டியாதல்.

fissure : வெடிப்பு; மூளை இடைச் சந்து; பிளவு வெடிப்பு : மூளைச் சுருக்கங்களில் உள்ள நெடும் பள்ளம், பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்துப் பிளப்பு.

fistula : புண்புரை; புரையோட்டை : குறுகிய வாருடைய புரையோடிய புண்புரைக் குழி, புரைக்கால்.

fitness : பொருத்தம்; தகுதி..

fitness, physical : உடல் தகுதி; உடல் நலம்.

fits : வலிப்பு (இசிப்பு) : நோயின் திடீர்த் தாக்குதல் அலை; வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சி அலை; சிறிது நேர உணர்விழப்பு; சிறிது நேரச் செயலிழப்பு.

fixation : நிலைப்பாடு; நிலைப்பு : 1. ஒரு பொருளின் பிம்பம் கண் விழியின் பின்புறத் திரையில் விழும் வகையில் அப்பொருளின் மீது இரு கண்களின் பார்வையையும் நேரடியாக ஒருமுகப்படுத்துதல். 2. மன வளர்ச்சி தடைபட்ட நிலை; முதிரா நிலை இயல் உணர்ச்சி வழிச் செல்லும் நிலை.

fixation point : பார்வை இணைவுப் புள்ளி : தெளிவான பார்வை உண்டாக்குவதற்காக விழித்திரையில் பார்வை அச்சுகள் இணையும் புள்ளி.

fixative : நிலைப்படுத்தி.

fixed action pattern : நிலைவினைத் தோரணி : மரபணு முறையில் நிருணயிக்கப்பட்ட நடத்தைத் தோரணி. இது அந்தத் தோரணிக்கு உரித்தான தூண்டுதல்கள் மூலம் உண்டாக்கப்படுகிறது.

fixed dose combination : நிலை மருத்துவ இணைப்பு : ஒரே பொதியுறையில் அல்லது மாத்திரையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை இணைத்து வைத்தல்.

flaccid : தொங்குதசை; துவள்தசை; தளர்ந்த : தளர்வுற்றுத் தொங்குகிற தசை, சுருக்கம் விழுந்த தசை.

flagellate : கசையிழை உயிர் : 1. கியார்டியா, டிரைக்கோமோ னாஸ் போன்ற வகையைச் சேர்ந்த புரோட்டோசோவா என்ற ஓரணுவுயிர். 2. மலேரிய ஒட்டுண்ணியின் ஆண் பாலின் உயிரணு.

flagellum : கசையுறுப்பு; கசையிழை : கசையடி போன்று